Breaking News
விமான நிலையத்தில் கல்முனை இளைஞனின் உள்ளாடைக்குள் சிக்கிய ரூ.4 கோடி!
சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல்லை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு
விமான நிலையத்தில் கல்முனை இளைஞனின் உள்ளாடைக்குள் சிக்கிய ரூ.4 கோடி!
சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல்லை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் நேற்று (09) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையில் வசிக்கும் 25 வயதுடைய இவர், விமானம் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் வர்த்தகர் ஆவார்.
இவர் நேற்று (09) காலை 8.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 01 கிலோ 975 கிராம் எடையுள்ள தங்க ஜெல் அடங்கிய 03 பார்சல்களை உள்ளாடை மற்றும் காலணிகளில் மறைத்து வைத்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் இந்த நபரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.