Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

"சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளின் நிர்வாக சபைக்கூட்டம்"

,

"சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளின் நிர்வாக சபைக்கூட்டம்" 

மாதந்தோறும் இறுதி புதன்கிழமைகளில் நிர்வாக சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற பொதுச் சபைத்தீர்மானத்துக்கு அமைவாக நேற்றைய தினம்  [28]  சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளின்  தலைவரும்  பிரதேச செயலாளருமான குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் நிர்வாக சபைக் கூட்டம் இடம்பெற்றது.

அக வணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர் பிரபாகரமூரத்தி அவர்கள் "கடந்த ஆண்டிலே இரண்டு சபைகளும் பல நிகழ்வுகளையும் பெருவிழாக்களையும் நடத்தி பலராலும் மெச்சத்தக்க வகையில் இயங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டினை விஞ்சத்தக்க வகையில் பண்பாட்டு விழாவினையும் கலை இலக்கிய விழாவினையும் இவ்வாண்டில் கொண்டாட வேண்டுமென்பதே எனது விருப்பமாகும். சண்டிலிப்பாயில் வேறுபாடு நோக்காது, இணைந்து செயற்படுகின்ற உத்தியோகத்தர்களின் செயலூக்கமும் நட்பு ரீதியாக பழகி, கலைப்பணியாற்றுகின்ற கலைஞர்களின் ஈடுபாடும் வேறெங்கும் காண இயலாத சிறப்பியல்புகளாகும்.
அந்தவகையில், பிரதேச மட்டத்தில் எல்லோருக்கும் பயன்தரத்தக்க கலை, இலக்கியச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து, பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களின் சிறப்புக்களை இளையவர்களுக்கு உணர்த்தத்தக்க வகையில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து செயலாளர் அறிக்கை வாசித்தல், பொருளாளர் அறிக்கை சமர்ப்பித்தல் முதலான வழக்கமான கூட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'கலாதரம்' (இதழ் 06) நூல் வெளியீட்டு விழா தொடர்பான ஏற்பாடுகள், கலைஞர் உதவித்திட்டம்  வழங்கல், கிராம மட்ட செயற்பாடுகள், "பன்னிரண்டு மாத விளக்கு" வேலைத்திட்டம், கலைஞர் சுவதம் செயற்றிட்டம், கலைஞர்களுக்கான மருத்துவ உதவி வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

நிறைவாக, சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர்  பூமணி உருத்திரகணேசன் அம்மையாரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.