Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சிறப்பு ஆய்வு விஐயமொன்றை மேற்கோண்டார்.

,

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சிறப்பு ஆய்வு விஐயமொன்றை மேற்கோண்டார்.

மருத்துவமனையின் விரைவான வளர்ச்சிக்காக ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் அத்துடன் 100 மில்லியன் நன்கொடையாகவும் வழங்கப்பட்டது
மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்களுக்கு மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை வழங்கும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை, முழுமையான பௌதீக மற்றும் மனித வளங்களைக் கொண்ட முழுமையான மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற சிறப்பு ஆய்வுக்குப் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் ஒப்புதலுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை மத்திய அரசாங்கத்தின்  நெறிப்படுத்தலில் மன்னார் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரசு ரூ.1000 நிதி ஒதுக்கீடு செய்யும் என்றும் அவர் கூறினார்.  மருத்துவமனையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மேலும் கூறுகையில் நிதி ஒதுக்கீடுகளில் 250 மில்லியன் இந்த ஆண்டிலேயே வழங்கப்படும், மீதமுள்ள 250 மில்லியன் அடுத்த ஆண்டு வழங்கப்படும்.

மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பது தனக்கு  தெரியும் என அமைச்சர் தெரிவித்தார்.

 பயிற்சியை முடித்து வரும் ஊழியர்கள், பணியமர்த்தப்பட உள்ள ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சியை முடித்து நாடு திரும்பும் மருத்துவர்கள் ஆகியோரை இந்த மருத்துவமனையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.