ஆறு நாட்கள் உடலில் கத்தியுடன் போராடிய இளைஞர்!
.
இந்தியா, ஹரியானா மாநிலம், சோனிபட்டியைச் சேர்ந்த தினேஷ் எனும் இளைஞருக்கு கடந்த 16 ஆம் திகதி சிலருடன் சண்டை ஏற்பட்டுள்ளது.
இச் சண்டையினால் தினேஷின் இதயத்தில் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.
கத்தியின் கைப்பிடி உடைந்ததனால், கத்தியை வெளியே எடுக்க முடியாமல் போயுள்ளது.
உடனே தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயத்தில் கத்தி முழுதாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இத்தகைய நிலையில் கத்தியை நேரடியாக நீக்கினால் அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்கலாம்.
அதன்படி, நேற்று புதன்கிழமை அரிதான அறுவை சிகிச்சையின் மூலம் இளைஞரை காப்பாற்ற மருத்துவர்கள் உதவி செய்தனர்.
நோயாளியின் இதயத்துக்கு அருகிலுள்ள சவ்வை கவனமாக திறந்து, சிக்கியிருந்த கத்தியை அகற்றி வலது ஏட்ரியல் அறையை சரி செய்தனர்.
நேயாளியின் நுரையீரலையும் சரி செய்தனர்.
நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி காப்பாற்றப்பட்டார்.
அவரது உடல் நலமடைந்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.