இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வடுக்கள் ஆறும் முன்னரே ISIS தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவில் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளனர்.
ISIS அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட நால்வரும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ISIS தீவிரவாதிகள் எனக் கூறப்படுபவர்களை வழி நடத்தியவர் யார்?; ‘த ஹிந்து‘ பத்திரிகை வெளியிடும் தகவல்.
ISIS அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட அவர்கள் நால்வரும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்திய விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் தற்கொலை தாக்குதல் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விரிவான ஒரு கட்டுரையை கொழும்பிலிருந்து வெளியாகும் ‘திவயின ஞாயிறு‘ சிங்கள வார இதழ் வெளியிட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ISIS தீவிரவாத அமைப்பின் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பார்க்கப்படுகிறது. இலங்கை கத்தோலிக்க மக்களை இலக்காக் கொண்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலால் ISIS தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதாரிகள் உள்ளிட்ட 277 பேர் கொல்லப்பட்டனர். 550 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை மேற்கொண்ட அனைத்து தீவிரவாதிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வர்
கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான மொஹம்மட் நுஸ்ரத் என்பவர் சிங்கப்பூர்,மலேசியா,டுபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மற்றும் மின்சார சாதனங்களை கொண்டு வந்து கொழும்பில் விற்பனை செய்தவர் என தெரியவந்துள்ளது.
யார் இந்த நப்ரான் நவுபர்?
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS தீவிரவாதிகள் எனப்படும் நால்வருள் இந்நாட்டின் பிரபல பாதாள குழு உறுப்பினரின் மகன் ஒருவனும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது. தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, அவர் 27 வயதுடையவர் எனவும் பொட்டு நவுபர் என்பவரின் மகனும் ஆவார். புறக்கோட்டைப் பகுதியில் புதுக்கடை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.அரசியல் பலம், பொலிஸ் பலம் மற்றும் பணம் போன்றவை அதிகமாக காணப்பட்ட அவர் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட இலஞ்சம் வாங்குதல் போன்ற அநேக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ‘த ஹிந்து‘ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. யூதர்கள்,கிறீஸ்தவர்கள், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் அந்தக் கட்சியின் தாய் அமைப்பான RSS அமைப்பை குறிவைக்குமாறு கைது செய்யப்பட்ட நால்வருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாக நால்வரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் அபூ எனப்படுபவரின் ஆலோசனையின் கீழ் இந்தியாவில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISIS தீவிரவாதிகள் தொடர்பில் முதல் வெளிப்படுத்தல்
இந்தியப் புலனாய்வுத் துறை 2010ஆம் ஆண்டில் இலங்கை உளவுத்துறையிடம் அறிக்கையொன்றை வழங்கியிருந்தது. குறித்த அறிக்கையில், கிழக்கில் உருவாக்கப்பட்டு வரும் சில முஸ்லிம் அமைப்புகள் மற்றும் நபர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமா எனக் கோரி குறித்த அறிக்கை காணப்பட்டது. அதன்படி, இவ்வாறு உருவாக்கப்பட்டு வரும் முஸ்லிம் தீவிரவாதம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் இந்தியா அன்று முதல் அவதானமாக இருந்துள்ளது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டில் கிழக்கில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இலங்கைக்கு ஏற்பட்ட விளைவுகள்
LTTE தீவிரவாதிகளின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான ஒரு தாக்குதலாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதியின் பின் நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்தது. தற்போது காணப்படும் இந்த பொருளாதார சீரழிவுக்கு அடித்தளமாக அமைந்தது இந்த சம்பவமே. கல்வி,சுகாதாரம், பொருளாதாரம் என இலங்கைத்தீவு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையில், ISIS தீவிரவாதிகள் எனக் கூறப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரையும் வழி நடத்தியவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒஸ்மன் ஜெராட் எனப் பெயர் குறிப்பிடப்படும் இவர் உருவத்தை மாற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் தற்போது இருப்பதாக சந்தேகிக்கப்படும் வடிவங்கள் வெளியாகியுள்ளன.
46 வயதான குறித்த சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.