சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கிவருகின்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால், புங்குடுதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கல்!
.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். புங்குடுதீவு கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர்.
மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டதால்.
புங்குடுதீவில் இயங்கிவருகின்ற தன்னார்வத் தொண்டு அமைப்புக்களான புங்குடுதீவு உலக மையம், சூழகம் போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளினதும் மற்றும் கிராமசேவகர்களினதும் வேண்டுகோளுக்கிணங்க.
சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கிவருகின்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால், முதல் கட்டமாக ரூபாய் இரண்டரை இலட்சம் ( 250000 ) நிதியுதவியில் 67 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள், பாய், பெட்சீற், பனடோல், சவர்க்காரம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாவனைப் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி பொருட்களான லைசோல், குளோரின் போன்றவை வழங்கப்பட்டன.
இவற்றை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கிவைக்கும் செயற்பாட்டில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன, சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், கிராம சேவகர்களான ச. சிறீதரன், உதயராஜ், புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன் மற்றும் மடத்துவெளி கடற்தொழில் சங்க செயலாளர் சிவரூபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தகுந்த நேரத்தில் இந்த சேவையை ஆற்றிய சுவிஸ் - புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகத்தினருக்கு பயனாளிகள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.