Breaking News
அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்ட வழுக்கை கழுகு!
.
அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு (Bald Eagle) அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் முதன் முதலில் வழுக்கை கழுகு கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த கழுகு அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது. அமெரிக்க வரலாற்றுடன் வழுக்கை கழுகுகளுக்கு 240 ஆண்டுகளுக்கு மேல் தொடர்புள்ளது. இதையடுத்து, வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில், வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் Joe Biden ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.