Breaking News
தமிழ் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் அநுர- அன்னலிங்கம் அன்னராசா
.

தென்னிலங்கை கடற்றொழிலாளர்களுடைய கைப்பற்றப்பட்ட படகுகளை கொண்டுவர முயற்சிக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏன் வடக்கு மக்களுடைய விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு வருவதில் தாமதிக்கின்றது என வட மாகாண கடற்றொழிலாளர் இணைய ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தேர்தலில் ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து கால அவகாசம் கோரப்படுகின்றது.கடந்த காலங்களில் வடக்கு கடற்றொழிலாளர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்களோ அதேபோன்று இந்த அரசாங்கத்திலும் அதே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.