Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் நலன்புரி விற்பனை நிலையம் புதுமையாக மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

.

பொலிஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து வருகை தருவதால், பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்து, அவர்கள் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சிரமங்களை குறைக்கவும், பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாகவும், பொலிஸ் நிலையத்துக்குள் அல்லாமல் வெளியே நலன்புரி விற்பனை நிலையம் / சிற்றுண்டிச் சாலை அமைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சீ.ஏ. தனபால் அவர்களின் தலைமையில், கடந்த காலத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இந்த நலன்புரி விற்பனை நிலையத்தை சிறப்பாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்றைய தினம்(25) திறந்து வைக்கப்பட்டது.

இந்த விற்பனை நிலையம் மூலம் எளிதாகவும், சீரான விலையில் பொருட்களை வாங்க வசதி உள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தரும் அனைவரையும் நலன்புரி விற்பனை நிலையத்துக்கு வரவேற்கிறோம்.

விற்பனை நிலையம் திறந்த விழாவில், யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜூ.எச். மாரப்பன், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எம்.ஆர். அம்பேபிட்டிய மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.