Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பு துறைமுகப் பகுதி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி- வெளிப்படும் சான்றுகள்!

,

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அப்பகுதியில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

இந்த புதைகுழி தொடர்பில் அவர் கூறுகையில்,

இந்தப் புதைகுழி வழக்கமான புதைகுழி அல்ல என்றும் உடல்கள் புதைக்கப்பட்ட விதம் அவை கொலை செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

மூன்று பேரின் எலும்புக்கூடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சிறு குழந்தையின் கையில் செம்பு கலந்த ஏதோ ஒன்றால் கறை ஏற்பட்டதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்கான காலப்பகுதியை விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, அறிக்கைகள் வழங்கப்படும்.

இந்த அகழ்வாராய்ச்சியில் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க மற்றும் துறைமுக காவல்துறையின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.ஜயரத்ன அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.