Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று..

,

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள்  ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் நியூஸ்ஃபெஸ்ட்டின் வாழ்த்துகள்.

இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது.

புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் மனமகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளை இன்று  கொண்டாடுகின்றனர்.

ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளாகும்.

காலையிலே நீராடி நறுமணம் பூசி புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் செல்லும் முஸ்லிம் மக்கள் அங்கு விசேட தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுபடுவர்.

அதன் பின்னர் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடுகின்றனர்.

அனைத்து முஸ்லிம் மக்களும் இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பித்ரா மூலம் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

வயிற்றில் உள்ள சிசு முதல் வயோதிபர்கள் வரை அனைவரும் பித்ராவை வறிய மக்களுக்கு வழங்குவது கடமையாகும்.