Breaking News
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்கள்.
தொழிற்சங்க கூட்டுக்குழுவினருடன் இணைந்து ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் சம்பள உயர்வுகோரி போராட்டம் !
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், MCA கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
தொழிற்சங்க கூட்டுக்குழுவினருடன் இணைந்து ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.