ஆளே அடையாளம் தெரியாத நம்ம டி. ராஜேந்தர்.. விரல்கூட ஹீரோயின் மீது பட்டதில்லை.. பெஸ்ட் மனிதர்: பிரபலம்
முதுமையை நாம் அனைவருமே எதிர்கொள்ளணும்

ரஜினிகாந்துக்கு இணையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கியவர் டி.ராஜேந்தர்.. கதாநாயகிகளை தொட்டுக்கூட நடித்ததில்லை.. நடிகைகள் மீது சுண்டுவிரல்கூட பட்டதில்லை..
முதல் படத்திலிருந்தே இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறார். சம்பள பாக்கி இதுவரை யாருக்கும் வைத்தில்லை.. ரொம்ப அன்பான மனிதர்.. ரொம்ப நல்ல மனிதர்” என்று பாராட்டி பேசியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, “நளினி, அமலா முதல் ஏராளமான நடிகைகளை நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர்.. கதை, வசனம், இசை, தயாரிப்பு, எடிட்டிங், கேமரா என எல்லா விஷயங்களிலுமே இறங்கி, எல்லாத்திலேயே சக்சஸ் செய்வது மிகவும் கடினம்.
உதாரணத்துக்கு பாக்யராஜை எடுத்துக் கொண்டால், நல்ல நடிகர், நல்ல திரைக்கதை, நல்ல டைரக்டர்.. ஆனால், இசையில் சோபிக்கவில்லை..
இது நம்ம ஆளு என ஒன்றிரண்டு படங்களில் இசையமைத்தார்.. அதற்கு பிறகு அதை தொடரவில்லை. ஆனால், ராஜேந்தர் பாட்டுக்கள் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. ஜெயம்ரவி படத்துக்குகூட இசையமைத்து பாடியிருக்கிறார்.. சிம்புவிடம் காணப்படும் அத்தனை திறமைகளும் டி.ராஜேந்தரிடமிருந்து வந்தவைதான்.
ஒருகட்டத்தில் டி.ராஜேந்தருக்கு அரசியலில் ஆர்வம் வந்தது.. திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். கலைஞரின் கொள்கை எல்லாம் டி.ராஜேந்தருக்கு பிடிக்கும்.
பிறகு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.. எத்தனையோ பேர் எம்எல்ஏ போஸ்ட்டிங்குக்காக ஏங்கி கிடப்பார்கள், அப்படியே எம்எல்ஏ போஸ்டிங் கிடைத்தாலும், மீண்டும் எம்எல்ஏவாக, மந்திரியாக துடிப்பார்கள். ஆனால், கிடைத்த எம்எல்ஏ பதவியை, ஏதோ ஒரு சின்ன முரண்பாடு காரணமாக உதறித் தள்ளிவிட்டார் டி.ராஜேந்தர்.
தலைவா – விஜய்
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, திமுகவிலிருந்த டி.ராஜேந்தர் தைரியமாக எதிர்த்து பேசினார்.. இது ரஜினிக்குகூட வராத தைரியம்.. இன்றுள்ள தவெக தலைவர் விஜய், அன்று “தலைவா” பட பிரச்சனைக்காக, கொடநாடு எஸ்டேட் வாசலில் விடிய விடிய காரில் குளிரிலேயே காத்து கிடந்தார்.
ஆனால், எந்தவிதமான பயமும் இல்லாமல் முதல்வர் எம்ஜிஅரை அன்று எதிர்த்தார் டி.ராஜேந்தர். இதை எம்ஜிஆரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. காரணம், அரசியலுக்காக பேசுபவர் டி.ராஜேந்தர் கிடையாது, இயல்பான குணம் கொண்டவர் என்பது எம்ஜிஆருக்கு நன்றாக தெரியும்.
ரஜினிக்கு இணையான சம்பளம்
ரஜினிகாந்துக்கு இணையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கியவர் டி.ராஜேந்தர்.. கதாநாயகிகளை தொட்டுக்கூட நடித்ததில்லை.. நடிகைகள் மீது சுண்டுவிரல்கூட பட்டதில்லை.. முதல் படத்திலிருந்தே இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறார். சம்பள பாக்கி இதுவரை யாருக்கும் வைத்தில்லை.. ரொம்ப அன்பான மனிதர்.. ரொம்ப நல்ல மனிதர்..
போலியாக நடித்து, பிறரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில் யாரையுமே ஏமாற்றாமல், திரைக்கு முன்னாலும், திரைக்கு பின்னாலும் இயல்பாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர்.
முதுமையை நாம் அனைவருமே எதிர்கொள்ளணும்
இன்றைக்கு அவரது முடி கொட்டி உள்ளதாகவும், பார்ப்பதற்கு டல்லாக இருப்பதாகவும், பழைய உற்சாகம் அவரிடம் இல்லாமல் இருப்பதாகவும, தாடியின் அடர்த்தி குறைந்திருப்பதாகவும சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அவருக்கு ஏற்கனவே உடல்நல பிரச்சனை இருக்கிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அதேபோல முதுமைன்னு ஒன்னு இருக்கு.. இந்த முதுமைக்கு நாம் அனைவருமே கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். அதனால்தான் அப்படி தோற்றத்தில் இருக்கிறார். மற்றபடி எப்பவுமே அவர் அதே உற்சாகத்துடனேயே காணப்படுகிறார்..
மீண்டும் பழையபடி சினிமாவில் பாடல்களை போடுவார், பிரம்மாண்ட செட் போடுவார். டி.ராஜேந்தரை யார் எப்போது பார்த்தாலும், “இவர் நம்ம ஆளுப்பா” என்று சொல்லக்கூடிய மனிதராக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.