Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”: தென்னிலங்கை காசா போன்று அழிந்திருக்கும் என்கிறார் விமல்.

.

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”: தென்னிலங்கை காசா போன்று அழிந்திருக்கும் என்கிறார் விமல்.

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,”எமது நாட்டின் முப்படையினரும் இணைந்து பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் தெற்காசியாவின் இஸ்ரேலாக தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்கும்.தமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும். தமிழீழத்திற்கு அப்பாற்பட்ட பிரதேசங்கள் அனைத்தும் இன்று காசா எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரை காப்பாற்ற அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்று அப்போது இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பிற்கு வந்திருந்ததை நாம் அறிவோம்.அன்டன் பாலசிங்கம் பிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகளுக்காக வேலைசெய்தார், அவரின் மனைவி விடுதலைப் புலிகளின் சீருடையுடன் பணியாற்றினார்.ஆனாலும் அவர்களால் இலங்கையில் ஒரு இஸ்ரேலை உருவாக்க முடியாமல் போனது. பாலஸ்தீனத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகின்றது.

சுதந்திர பாலஸ்தீனம் உருவாகுவதை தடுக்க அமெரிக்கா அதன் அதிகாரங்களை பிரயோகிக்கின்றது.பாலஸ்தீன மக்கள் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்க வேண்டிய ஒன்று.அதனால் அவர்களின் துன்பம் மற்றும் துயரங்களை ஏனைய சர்வதேச நாடுகளை விட எங்களால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.“ என தெரிவித்தார்.