தோல்வியை உணர்ந்த ரணில்; சஜித்தை வீழ்த்த முயற்சி?
.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாதென புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதால் அவர் சோர்ந்து போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கிறது.
அதனால் சஜித் பிரேமதாசவின் வாக்குகளை குறைப்பதற்காக ரணிலின் முழு நேரமும் செலவிடப்படுவதாகவும் ஒவ்வொரு சந்திப்பின் போதும் சஜித் அனுரவிடம் தோற்றுவிடுவார் என்று மக்களை திசை திருப்பி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்துகிறது.
சஜித் அனுரவிடம் தோற்றுப் போவதாக ஒரு ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பதன் அடிப்படை நோக்கம் அவர் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதை அறிவிப்பதாகும்.
ரணிலுக்கு தனது தோல்வி குறித்து தெளிவாக விலங்கியுள்ளதால் இவ்வாறு நடந்துக்கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது.
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டியிருந்தது. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க அதன் அதிகாரத்தை நீண்டகாலம் வைத்திருந்தமையால்தான்.
ரணில் விக்கிரமசிங்க, பல தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட போதும் தனது தலைமை பதவியை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு தாராளவாத மற்றும் ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. விஜேவர்தன தலைமுறையினரின் அதிகாரத்தை கட்சிக்குள் ஸ்திரப்படுத்த அவர் தொடர்ந்து விரும்பினார்.
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச போன்று கவர்ச்சிகரமான மக்கள் தலைவர் அல்ல. மகிந்தவுக்கு வயதாகிவிட்டாலும் அந்த ஈர்ப்பு போகவில்லை. ஆனால், ரணிலுக்கு எஞ்சியிருப்பது சாகல ரத்நாயக்க, அகிலவிராஜ், ரவி கருணாநாயக்க போன்றவர்களே.
செல்வதற்கு இடமில்லா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒரு குழுவினரும் ரணில் விக்கிரமசிங்கவின் தோளில் தொங்கிக்கொண்டுள்ளனர்.
ஜே.ஆர்.ஜெயவர்தன 1988ல் ஓய்வுபெற்றபோதும், அவருக்குப் பின் வந்தவருக்கு ஆட்சியை கையளித்துவிட்டு, ஐ.தே.க.வில் அவர் அதிக அதிகாரத்தை வைத்திருந்தார். மற்றும் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்தார்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் கூச்ச சுபாவத்தால் ஐ.தே.க.வினர் மத்தியில் அவர் மீது ஒரு நகைச்சுவை உணர்வு ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டுகிறார். இவை அனைத்தும் அதிகார பேராசைக்காக செய்யப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார் என்பதை புரிந்து கொள்ள முடியாதவராக இருக்க முடியாது.
அதனால்தான் அவர் தனது எதிரியான சஜித் பிரேமதாசவை சிறுமைப்படுத்துகிறார். ரணில் காமினி அத்துகோரலை அழித்தார். கரு ஜெயசூர்யாவை அழித்தார். எழுச்சி பெறும் ஒவ்வொரு தலைவரையும் அழித்தார்.
ரணில் விக்கிரமசிங்க 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டார். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதுதான் அவமானம்.
அவரால் வெற்றி பெற முடியாவிட்டால், ஒரு கட்சி சார்பற்ற தலைவர் செய்ய வேண்டியது, தனது சொந்த அணியின் மற்றுமொருவருக்கு ஆதரவளிப்பதாகும்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவால் அதைச் செய்ய முடியாது. விஜேவர்தனவின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியாக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க நினைப்பதே காரணம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கிறது.