Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்!

விவசாயி தன்னுடைய நிலத்தைத் தான் ஊழுதார்?

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொளண்டு கடந்த 10ஆம் திகதி குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகளால் உழவு செய்துள்ளார்.

அதன்போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, பௌத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விவசாயிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மே 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.