மன்னாரில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு - வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார்!
.
மான்னாரில் இருந்து பாலத்தை கடக்கும் பகுதிகளில் வரும் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் மன்னாரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் இச் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதுடைய சவேரியன் அருள் மற்றும் 42 வயதுடைய செல்வக்குமார் யூட்வயது என தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.