Breaking News
பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு : ரவிகரன் எம்.பி பங்கேற்பு
.
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு - பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்தம் தைத்திருநாளை முன்னிட்டு இடம்பெறும் விசேட பூசை வழிபாடுகள் 13.01.2025 இன்றும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். இந் நிலையில் நீராவியடிப் பிள்ளையாருக்கு விசேட அபிஷேக பூசைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிள்ளையாருக்கு குழை சோறு படையலிட்டு மிகச் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும் இந்த வழிபாடுகளில் செம்மலை மற்றும், செம்மலை கிழக்கு கிராம மக்கள், அடியவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.