Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லிணக்க செயன்முறை வேலைத்திட்டத்தைத் தயாரிக்க விசேட குழு!

.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கென விசேட குழுவொன்றை நியமித்து, அதுபற்றி ஜெனீவாவுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்ற வேளையிலேயே இலங்கையில் ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அதனையடுத்து இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான தீர்மானம் வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்குக் காலநீடிப்பு செய்யப்பட்டது.

அவ்வாறு ஒருவருடத்துக்குக் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத்தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்டமாக இத்தீர்மானம் மீண்டும் காலநீடிப்பு செய்யப்படுமா? அல்லது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது

குறித்து புதியதொரு பிரேரணை முன்மொழியப்படுமா? இதனை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது? எனும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக, தாம் முன்னெடுக்கவிருக்கும் நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கென அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும், அக்குழுவினால் தயாரிக்கப்படும் வேலைத்திட்டத்தை உள்ளடக்கியதாக ஜெனீவாவுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவு