Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

"Clean Sri Lanka" திட்டம் தொடர்பில் பொய்யான குரல் பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் அறிக்கை

.

"Clean Sri Lanka" திட்டம் தொடர்பில் பொய்யான கருத்துகளை வௌியிட்ட ஒருவரின் குரல் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸாரினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவொன்றை குறிப்பிட்டு பொதுமக்கள் தமது வீட்டுக்கு முன்பாக காணப்படும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கியும் குறித்த குரல்பதிவு வௌியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படாதவர்களுக்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குரல்பதிவு பொய்யானது எனவும் இதனை இலங்கை பொலிஸ் வௌியிடவில்லை எனவும் பொலிஸாரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தக் குரல்பதிவை வௌியிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.