Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழில் புலம்பெயர்ந்தவர்களின் சமூகத்திற்கு பல நலன்புரி சேவைகள்! பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வு.

.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில்  பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல். லக்சாயினி அவர்கள்  தலைமையில்  இன்றைய தினம் (28.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில்,  வெளிநாட்டில் தொழில்புரிபவர்களால் நாட்டிற்கு அந்நியச் செலாவணி கிடைத்துவருவதாகவும்,  பதிவு செய்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கான விழிப்புணர்வுகள் அதிகம் தேவை எனவும் குறிப்பிட்டதுடன், தந்தை அல்லது தாய் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடு சென்ற நிலையில் அவர்களின் பிள்ளைகள் தமது கல்வியில் ஆர்வம் காட்டி கற்று நல்ல தேர்ச்சி பெற்றமையிட்டு பிள்ளைகளையும் அவர்களின் பெற்றோர்களையும்  பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இவ் போட்டி நிறைந்த கல்விச் சூழலில் விடாமுயற்சியாக கற்று உயர்வு அடைய வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் கல்விக்கான உதவியானது ஒரு ஊக்கப்படுத்தலாகும் எனவுமகுறிப்பிட்டார்.

  தரம் 05 புலமைப்பரிசில் (25,000/=) பரீட்சை, க.பொ. த (சாதாரண தரம் 30,000/=) மற்றும் க. பொ. த (உயர்தரம் பரீட்சை 35,000/=) ஆகியவற்றில் அதி உயர் சித்தியடைந்த  26 மாணவர்களுக்கான ஊக்குவிப்புக்கொடுப்பனவு மற்றும் 98 மாணவர்களுக்கான ரூபா 10,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் என்பன மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்க துணை நிற்கும்

மேலதிக தேவைப்பாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்றும் மாணவர்களுக்கு துணை நிற்கும் எனக் குறிப்பிட்டு மாணவர்களின் எதிர்கால ஒளிமயமான வாழ்க்கைக்கு தமது வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.