கிண்ணியா வரலாற்றில் முதலாவது உலக சாதனை சிறுவன் அக்லான் பிலால் அவருக்கான கௌரவிப்பு!
.

Little diamond preschool & abacus learning center இனால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் இவருக்காக 3 விருதுகளை வழங்கப்பட்டன.1.World record achievement award பத்தின்அடுக்கான இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய இலக்கங்கள் என்பவற்றை எண் கணித அடிப்படையில் உலகளாவிய ரீதியில் எடுத்துரைத்த முதலாவது சிறுவன் என்ற உலக சாதனைக்கான விருது. 2. Abacus Special Competition Award 2024.Abacus மூலம் ஐந்து நிமிடங்களில் 100 கணக்குகளை செய்யும் போட்டியில் சரியான விடையை அளித்து விருதினை பெற்றுக் கொண்டார். 3. Abacus Level Completion Award Abacus ஆரம்பகட்ட நிலையை நிறைவு செய்தமைக்கானவிருதினையும் பெற்றுக் கொண்டார்.இவருக்கான விருதை சிறப்பு விருந்தினரான Mrs.M.C. Zeenathul Munawwara ( Zonal Director of Education – Kinniya) மற்றும் விசேட விருந்தினரான Mr.B.Christopal ( Abacus Instructor – Eastern university of Srilanka) கௌரவ விருந்தினரான Mr.A.C.M .Mussil ( Director of planning, Ministry of Education – Eastern province) மற்றும் Abacus ஆசிரியர்களான Mrs.Asmiya , Mrs.Rifka ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.