Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இஸ்ரேலை நோக்கி ஈரான் 400 ஏவுகணை தாக்குதல் – பதில் தாக்குதல் நடத்தினால் பதிலடி பலமாக அமையும்: ஈரான்

.

நேற்றிரவு (01) இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதலொன்றை முன்னெடுத்திருந்தது.

இதன்போது நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பப்பட்டு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியிருந்தது.

அந்த வகையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் 400 ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் நேரடியாக இராணுவ தாக்குதல்களை தொடுக்க நேரிடலாம் என்று நேற்று (01) அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலை நடத்துவதற்காக ஈரான், 400 ஏவுகணைகளை வீசியுள்ளது. இதன் காரணமாக இலட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.

டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட இந்த ஏவுகணைகளால், அங்குள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

வானில் பறந்து வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து அழிக்கும்பொருட்டு அதிநவீன கருவிகள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.

மேலும், தாக்குதல்களை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால் பதிலடி பலமாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தினர்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர்.

இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட பகுதிகளில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானில் சில தினங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின.

இந்த தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக கூறப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கியது. தொடர்ந்து ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர், மற்றொரு உயர்மட்ட தளபதியான நபில் கவுக் ஆகியோரை அடுத்தடுத்து இஸ்ரேல் இராணுவம் கொன்றது.

லெபனான் மீதான தொடர் தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 1000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் இந்த தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஈரான் இராணுவம் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.