பணம் வழங்கப்படும் என்ற செய்தியில் எதுவித உண்மையும் இல்லை!
,

வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து, வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஒரு யூடியூப் செனல் வௌியிட்டுள்ள காணொளியில் எதுவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான காணொளியில், வௌிநாட்டில் தொழில் புரிவோர் தங்கள் கடவுச்சீட்டின் நகலை இலங்கையில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடி காணொளியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டொக் மூலம் மட்டுமே பணியகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.