Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது ; அனுர, மோடியிடம் மூன்றும் புதுப்பிப்பதற்கான, சேர்வதற்கான இலங்கையின் விருப்பம் தெரிவிப்பு !

.

பிரிக்ஸ் அமைப்பில்(BRICS) இணைவதற்குரிய இலங்கையின் ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தன்னுடைய மூன்று நாள் இந்திய அரசு பயணத்தின் போது, இதற்கான விருப்பத்தை மீண்டும் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்காலத்தில் பிரிக்ஸ அமைப்பில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கும்போது மட்டுமே இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு முதல் பட்டியலில் இருந்த உறுப்பினர்களைத் தவிர வேறு எந்த புதிய உறுப்பினர்களையும் பிரிக்ஸ் இன்னும் பரிசீலிக்கவில்லை.

எனினும், புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் விடயத்தில், பிரிக்ஸ்க்குள் ஒருமித்த கருத்து ஏற்படும்போது, இலங்கை வெளிப்படுத்திய ஆர்வத்தை இந்தியா, நிச்சயமாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான மன்றமான பிரிக்ஸில் தற்போது ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.மேலும் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, ஈரான், ரஸ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவே அவையாகும்.