Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த திஹாரிய UCMAS மாணவர்கள்!

.

2024ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் குறித்த சர்வதேச மனக் கணிதப் போட்டி இம்மாதம் 14ஆம் திகதி டில்லி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இக்குறித்த போட்டியில் உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 6,000 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில், இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில்103 மாணவர்கள் சென்றிருந்ததோடு, முதல் தடவையாக திஹாரிய யுசிமாஸ் நிலையத்திலிருந்து 4 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் CAT Z (Basic) பிரிவில் ரிஷாதா ரிம்ஸான் செம்பியன் கிண்ணத்தையும், CAT Z (Basic) பிரிவில் ரீனா ரிஸ்மி செம்பியன் கிண்ணத்தையும், ⁠CAT A ( Elementary A) பிரிவில் நுஹா ஜலால்தீன் முதலாம் இடத்தையும்(1st Runner up), CAT B ( Elementary B) பிரிவில் அக்லா பௌஸுல் ஹமீட் முதலாம் இடத்தையும்(1st Runner up) பெற்று வெற்றி வாகை சூடினர்.

மேலும் மேற்படி மாணவர்கள் 10 ஆம் திகதி கொழும்பு சுகத்ததாச உள்ளக அரங்கில் தேசிய ரீதியில் இடம்பெற்ற மனக்கணிதப் போட்டியின் அதிசிறந்த வெற்றியாளர்களுமாவர்.

பயிற்றுவிப்பாளர்களின் மாதக்கணக்கான அர்ப்பணிப்பும், அனுபவமும், பெற்றோர்களின் பாரிய ஆதரவும் இம்மாணவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய மண்ணின் மாணவர்கள் வெற்றி வாகைசூடி நாட்டுக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துகின்றோம் என்று IMECS மற்றும் யுசிமாஸ் திஹாரிய நிலையத்தின் பணிப்பாளர், பிரதம பயிற்சியாளர் மற்றும் பொறியியலாளர் திரு. பௌஸுல் ஹமீட் அவர்கள் தெரிவித்துள்ளமை குறி.