தனியார் பேருந்து ஒன்றும் அரசப் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பாணந்துறை பகுதியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்.
இந்த விபத்து இன்று (02) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், பாணந்துறை பேருந்து நிலையத்தில் திருப்ப முயன்ற அரச பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அரச பேருந்தில் பயணித்தவர் எனவும், அவர் பாணந்துறை டிப்போவில் கடமையாற்றும் பேருந்து நடத்துனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அக்கரபத்துவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர் தனியார் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.