Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே.

ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர்.

ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.