ரணில் பக்கம் சாய்ந்தனர் மகிந்தவின் சகாக்கள்: ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க முடிவு
.
மாத்தறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் தேர்தலில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையும் தேர்தலில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என்று தான் நம்புவதாக விஜேசேகர கூறியுள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறுவிதமாக கருதுவதாகவும் அமைச்சர் கூறினார்.
எங்களுக்கு கட்சி நிறங்கள் முக்கியமல்ல, தேசியக் கொடியே முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நீடிக்கவே நாட்டு விரும்புவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.