Breaking News
ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்: நினைவு முத்திரையும் வழங்கிவைப்பு
.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரபல தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பு விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை இதன்போது ரஜினிகாந்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.