ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது உறுதி
.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களுடனான சந்திப்பு கொடகமையில் இடம்பெற்ற நிலையில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பலர் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்த நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில போட்டியிடுவது குறித்து எதிர்வரும் சில நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் “நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கவும் தயாராக உள்ளோம்” எனவும் விஜேதாச ராஜபக்ச மேடைகளில் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை முன்னிறுத்த உள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தமது கட்சியில் இருந்து கொண்டு வேறு கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில்,அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.