Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி COLOURS AWARD நிகழ்ச்சி!

பாடசாலைகளுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு மத்தியில் ஒரு இல்லமானது தனக்கான தனித்துவ கீதம் ஒன்றினை வடிவமைத்துள்ளமை வரலாற்றில் முதல் தடவையாகும்.

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதன்போது நீல நிறத்தை உடைய  ஜன்னத் இல்லத்திற்கான உத்தியோகபூர்வ மேலங்கி, இல்லக்கொடி அறிமுகத்துடன் இல்லக் கீதம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஜன்னத் இல்லத் தலைவர் எம்.வை.எம்.யூசுப் இம்ரான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைஸால்,கௌரவ அதிதிகளாக பிரதி அதிபர் இ .  றினோஸ் ஹஜ் மின் உதவி அதிபர்களான யு.எல் ஹிதாயா, நஸ்மியா புகாரி ஆகியோரும் விசேடஅதிதிகளாக இல்ல விளையாட்டுப் போட்டியின் செயலாளர் யு.எல்.சிபான்,நுஸ்ரத் இல்லத் தலைவர் ஏ.ஆர்.எம் ஹிம்சாத், மின்னத் இல்லத் தலைவர் ஏ.எம் பஸ்மீர் விளையாட்டுப்  பயிற்றுவிப்பாளர் எம்.ஏ.எம் றியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது COLOURS AWARD எனும் தொனிப்பொருளில் ஆரம்பமானதுடன் பெரு விளையாட்டுக்கள், மைதான விளையாட்டுக்கள், உட்பட சிறுவர் சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜன்னத் இல்லத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரு விளையாட்டுக்களில் ஒன்றான ஆண்களுக்கான கிறிக்கெட், பெண்களுக்கான கிறிக்கெட் மற்றும் பெண்களுக்கான எல்லே விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் மாணவர்கள் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

இது தவிர சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் தரம் 4  ஆண்   மாணவர்கள் சம்பியன் கிண்ணத்தை பெற்றமை ஜன்னத் இல்லத்திற்கு பெருமை சேர்த்தது.குறித்த நிகழ்வில் பெரு விளையாட்டுக்களில் அதீத திறமைகளை வெளிக்காட்டிய 8 மாணவர்களுக்கு கேடயங்கள்   வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை   குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாடசாலைகளுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு மத்தியில் ஒரு இல்லமானது தனக்கான தனித்துவ கீதம் ஒன்றினை வடிவமைத்துள்ளமை வரலாற்றில் முதல் தடவையாகும்.

பாறுக் ஷிஹான்