சுயநலன்கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேச சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் "மாமனிதர்" வைத்தீஸ்வரன்!
தமிழீழ மண் தந்த ஒரு சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடகநெறியாள்கையாளர். அவர் கலைகளுக்காகவே வாழ்ந்தார்.
முன்னெடுத்துவரும் விடுதலைப் போராட்டத்திலே ஒரு இலட்சியப் பிடியை அவரிடம் ஏற்படுத்திவிட்டது.
அவர் தமிழீழ மண் தந்த ஒரு சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடகநெறியாள்கையாளர். அவர் கலைகளுக்காகவே வாழ்ந்தார். கலைகள் பற்றியே சதா சிந்தித்தார். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதிய நுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்குஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தார்.
அவரைப் போலவே அவரது கலைப்படைப்புக்களும் அழகும் ஆழமும் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை. அத்தோடு அவர் தனது கலைப் படைப்புக்கள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்கு முறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார். போராட்டவாழ்வில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் பல்வேறு
கோணங்களில் படம்பிடித்தார். தனது கலைப்படைப்பின் உச்சமாக முதல் மாவீரன் பொன் சிவகுமாரன் நினைவு தூபி,கரும்புலி கப்டன் மில்லர் நினைவு தூபி,தீருவில் நினைவு தூபி வடிவமைப்புகள் அவரின் விடுதலைப் பற்றின் சான்றுகளாகி விட்டது.அன்னார் ஆற்றிய பெரும் பணி என்றுமே போற்றுதற்குரியது.
கலைஞர் ரமணி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்"என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு
வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம் சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.


