Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து பயங்கரம்; வெளிநாட்டு பெண்ணுக்கு வாடகை வேன் சாரதியால் நடந்த சம்பவம்!

கைதுசெய்யப்பட்ட வாடகை வேன் சாரதி நுவரெலியாவில் வசிக்கும் 70 வயதுடைய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்.

வெளிநாட்டு பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு, அந்த பெண்ணை 30 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றதாக கூறப்படும் வாடகை வேன் சாரதி ஒருவர் எல்ல பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட வாடகை வேன் சாரதி நுவரெலியாவில் வசிக்கும் 70 வயதுடைய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்தவர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆவார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அல்ஜீரிய பெண் ஒருவர் நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி  சுற்றுலா செல்வதற்காக வாடகை வேன் ஒன்றை ஆன்லைன் ஊடாக முன்பதிவு செய்துள்ளார்.

பின்னர், நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபரான வாடகை வேன் சாரதி அல்ஜீரிய பெண்ணுக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார்.

அல்ஜீரிய பெண் அந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில்  மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான வாடகை வேன் சாரதி பெண்ணிடமிருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி,  பெண்ணை ராவணா எல்ல அருகே உள்ள 30 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்.

மயக்கத்திலிருந்த எழுந்த அல்ஜீரிய பெண் காயங்களுடன் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர் பொலிஸார் இணைந்து அல்ஜீரிய பெண்ணை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான வாடகை வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.