Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நிறுவனங்களைச் சுருட்டிப்போட வரும் சுனாமி!

மத்திய கிழக்குப் போரால் ஆட்டம் காணும் பிரான்ஸ் கட்டுமானத் துறை!

"நிறுவனங்களைச் சுருட்டிப்போட வரும் சுனாமி!" - மத்திய கிழக்குப் போரால் ஆட்டம் காணும் பிரான்ஸ் கட்டுமானத் துறை!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கம், பிரான்ஸ் நாட்டின் எரிபொருள் நிலையங்களில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கட்டுமானத் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருளைப் பெருமளவில் சார்ந்திருக்கும் இத்துறை, தற்போது கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

கட்டுமான நிறுவனங்கள் இந்த நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது தொடர்பான  பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு சிறிய மண் தோண்டும் இயந்திரத்தை இயக்குவதற்கான செலவு, கடந்த மாதத்தை விட தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளுக்காகப் பணியாளர்களையும் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் நாளொன்றுக்குச் சுமார் 400 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது.

"லிட்டருக்கு ஒரு யூரோ கூடுதல் என்பது சிறிய கட்டுமான நிறுவங்களால்  நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பெரும் சுமை. இப்படி ஒரு நிலைமையை நாங்கள் சந்தித்ததே இல்லை," என வேதனை தெரிவிக்கிறார்கள்  இந்த நிறுவங்களின்  உரிமையாளர்கள்.  ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் கட்டுமானத் துறைக்கு, இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

மணல்: இயந்திரங்கள் மூலம் குவாரிகளிலிருந்து மணலை வெட்டியெடுக்க அதிக எரிபொருள் தேவைப்படுவதால், மணலின் விலை 5 விழுக்காடு உயர்ந்துள்ளது.
செங்கல்: செங்கற்களைச் சுடுவதற்குப் பயன்படும் எரிவாயுவின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், ஒரு யூரோவுக்கும் குறைவாக இருந்த ஒரு செங்கல்லின் விலை தற்போது 2 முதல் 2.20 யூரோக்கள் வரை இருமடங்காக உயர்ந்துள்ளது.
கட்டிடக் கலவை (கான்கிரீட்): முன்பு ஒரு கன மீட்டருக்கு 90 யூரோக்களாக இருந்த கட்டிடக் கலவை, தற்போது 150 யூரோக்களாக விற்றுத் தீர்க்கிறது.  இந்தக் கூடுதல் செலவுகளைத் தவிர்க்க முடியாமல், புதிய கட்டுமானப் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டில் (Devis) வாடிக்கையாளர்களின் தலையில்தான் நிறுவனங்கள் சுமத்த வேண்டியுள்ளது.

"இந்த விலைவாசியால் வீடுகட்ட நினைக்கும் சாமானியர்கள் வங்கிக் கடன்களைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். வட்டியில்லாக் கடன்கள், சீரமைப்புக் கடன்கள் கிடைப்பது கடினமாகும். வாடிக்கையாளர்களுக்குக் கடன் கிடைக்காவிட்டால், தங்களால் புதிய வேலைகளைத் தொடங்க முடியாது. இதனால் புதிய திட்டங்கள் முடங்கும் அபாயம் உள்ளது" என கட்டுமான நிறுவவன கவலை தெரிவிக்கின்றனர் .

இந்தச் சோகம் இத்துடன் முடிவடையப் போவதில்லை. வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மேலும் சில பொருட்களின் விலை கணிசமாக உயரவுள்ளது: அலுமினியத்தின் விலை 8 விழுக்காடும், குழாய்கள் அமைக்கப் பயன்படும் பெட்ரோலியக் கலவை கொண்ட நெகிழிப் பொருட்களின் (PVC) விலை 11 விழுக்காடும் உயரவுள்ளன. "இது நிறுவனங்களுக்கு வரப்போகும் மாபெரும் சுனாமி. நிறுவனங்களின் லாபம் குறைந்து, பணப்புழக்கம் முற்றிலுமாக முடங்கும். தினசரிச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் பரிதாப நிலை ஏற்படும்" என எச்சரிக்கிறார் சிறு கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAPEB) நிர்வாகி ஸ்டீபன் லெர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிரான்ஸ் நாட்டின் கட்டுமானத் துறை சுமார் 30,000 வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசின் உதவிக்கரங்கள் உடனடியாக நீளவில்லை என்றால், இத்துறை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.