Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அமைச்சர் அத்துல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

அமைச்சர் அத்துல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவால் நேற்று (17) கைதுசெய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அத்துல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. 

அதன்படி, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 77 திட்டங்களில் 15 திட்டங்களுக்கு பணம் செலவிடப்பட்டிருந்தாலும், தொடர்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, அரசாங்கத்திற்கு 70 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தும் வகையில் நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2016 - 2017 காலகட்டத்தில் அவரது அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.