மிதக்கும் வாக்குகளில் அவதானம்: ரணிலின் புதிய உத்தி
.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கம்பஹா மாவட்டத்தில் அனைத்து ஆசனங்களையும் உள்ளடக்கிய பல கட்சிகளின் பங்கேற்பின் மூலம் ஜனாதிபதி தேர்தல் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஜனாதிபதிக்கு ஆதரவான சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் இன்னும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது இருக்கும் மிதக்கும் வாக்காளர்கள் (floating Votes) மீது அதிக அவதானம் செலுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, சுமார் 40 இலட்சம் பேர் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
அதன்படி, இவ்வாறான மிதக்கும் வாக்குகள் மீது அதிக அவதானம் செலுத்துமாறு, ரணில் விக்கிரமசிங்க மூலம் தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மிதக்கும் வாக்குகளை இலக்கு வைத்து விசேட பிரச்சார நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.