இந்தியன் 2 பற்றி சுவாரசிய தகவலை கூறிய ஷங்கர்!
மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள 2.
இந்தியன் 2
“கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் தற்போது இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக உலகமுழுவது நடைப்பெற்று வருகிறது.
இன்று ப்ரோமோஷன் பணிக்காக ஐதராபாத் சென்றனர் படக்குழுவினர்.சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழு அதில் சங்கர் படத்தை பற்றிய சுவாரசிய தகவலை கூறினார்.
” படத்துல ஒரு ரோப் சீன் இருக்கு அவர் நாளு நாள் அந்த ரோப் ல தொங்கிக்ட்டே நடிச்சாரு, அதுலயும் ப்ராஸ்த்டிக் மேக்அப் போட்டுகிட்டு, பஞ்சாபி மொழி பேசனும், கேமராக்கு லிப் சிங்க் கொடுக்கனும், இதயும் எந்த வித சலிப்பு இல்லாம் அநடிச்சாரு, 70 வயசு ஆனாலும் கதாப்பாத்திரத்திற்கு அவரு போடுற முய்ற்ச்சி என்ன பிரமிக்க வைக்கிறது,
இவ்ளோ ஆரவம் காம்மிக்கிற ஒரு நடிகர் இருகும் போது நம்ம என்ன நெனச்சாலும் அத ஸ்கிரீன்ல கொண்டு வர முடியும் ” என கூறினார்.