Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பலமற்று கிடக்கும் ராஜபக்ச குடும்பம்: முற்றாக உடைக்கப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்

.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாரிசு உரிமையாளர்களான ராஜபக்ச குடும்பத்தின் பலம் வாய்ந்த ஐந்து பேர் தற்போது கட்சியில் பலமற்றவர்களாகிவிட்ட நிலையில், அதன் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, தற்போதைய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச , பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச என ராஜபக்ச குடும்பத்தின் சில முக்கியஸ்தர்கள் பதவிகளை வகித்த போதிலும் அவர்களின் அதிகாரங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ரணில் ஆதரவு நிலைப்பாட்டிற்கு ஷசேந்திர ராஜபக்ச மாறினாலும், ராஜபக்ச குடும்பத்துடன் விரிசலை ஏற்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பல தடவைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்த கருத்துக்கள் மூலம் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் இருந்து விலகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததும் காணப்பட்ட ராஜபக்ச குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் முற்றாக உடைக்கப்பட்டு, கட்சியின் பெரும்பான்மையானவர்களை ரணில் விக்கிரமசிங்க தன் பக்கம் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.