சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும், இல்லையென்றால்...: ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்,
,

சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். இஸ்ரேலிய மீறல்களைக் காரணம் காட்டி, பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் நிறுத்தியது. இது, ஒப்பந்தம் முறிந்து போகக்கூடும் என்ற கவலையை எழுப்பியது. காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து "நரகம் வெடிக்கட்டும்" என்று ஜனாதிபதி டிரம்ப் திங்களன்று தெரிவித்தார். மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்ததை அடுத்து ட்ரம்பின் எச்சரிக்கை வந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. இது போர் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.