Breaking News
இந்திய செய்திகள் “அரசியல் கேள்வி வேண்டாம் என கூறியிருக்கிறேன்“; செய்தியாளர்களுக்கு பதிலளித்த ரஜினி “அரசியல் கேள்வி வேண்டாம் என கூறியிருக்கிறேன்“; செய்தியாளர்களுக்கு பதிலளித்த ரஜினி!
.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னைக்கு நடிகர் ரஜினி வந்தடைந்தார்.
இவ்வாறிருக்க விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரவுள்ளமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு ரஜினி, “அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.