Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பில் களமிறங்குமா தமிழரசுக் கட்சி?: இந்த வாரம் தீர்மானம்!

.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக் குழு கூடி, அந்தத் தீர்மானத்தை எடுக்கும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அரசால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து போட்டியிட உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இணைந்து போட்டியிடுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்ட போதிலும் அக்கட்சிகள் குறித்த அழைப்பை நிராகரித்துள்ளமையால் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது.