Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பல்வேறு. குற்றங்களுக்காக தேடப்பட்டுவந்த நபர் இரு மாதங்களின் பின் காரைநகரில் கைது!

பல்பொருள் அங்காடி உடைத்து திருடப்பட்ட சம்பவம் - CCTV காட்சிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

பல்வேறு. குற்றங்களுக்காக தேடப்பட்டுவந்த நபர்  இரு மாதங்களின் பின் காரைநகரில்
கைது!

காரைநகர் பல்பொருள் அங்காடி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் இரண்டு மாதங்களின் பின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் - 
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு செல்லும் புது வீதி சந்தியில் உள்ள பல்பொருள் அங்காடி உடைத்து திருடப்பட்ட  சம்பவம் தொடர்பில் அங்கிருந்த CCTV காட்சிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

ஆனாலும் அவர் பொலிசாரிடம் மாட்டாது தலைமறை வாகியிருந்தார். இன்னிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் பொலிஸ் அதிகாரிகளான  SI வினோத் மற்றும் சார்ஜன் ராஜித ஆகியோரது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அவர் கைதாகியுள்ளார். 
காரைநகர் களபூமியைச் சேர்ந்த குறித்த நபர் கைதாகும்போது அவரது உடமையில் ஹெரோயின் ரக போதைப் பொருளும் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். 

இதே நேரம் குறித்த நபர் ஏற்கனவே இருவேறு வழக்குகளுக்காக நீதிமன்றால் பிடிவிராந்த பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்று பொலிசார் தெரிவித்தனர்...
இதையடுத்து குறித்த நபர் போதைப்பொருள், திருட்டு மற்றும் பிடிவிராந்தில் தேடப்பட்டு வந்த நபர் என்ற பல்வேறு குற்றங்களுக்காக க்சுதாகியுள்ள நிலையில், நாளை (7) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.