Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இவ்வாண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பிற்கு 51 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது - இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில்!

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில்  மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிதிகள் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.