Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மூலம் அவசர நிதி உதவியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெற கோரிக்கை!

இலங்கை அரசு RFI உதவிக்கான கோரிக்கையை IMF-க்கு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அதன் Rapid Financing Instrument (RFI) மூலம் அவசர நிதி உதவியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெற வேண்டி கோரிக்கை வைத்துள்ளதாக, இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவன் பாப்பாஜியோர்ஜியோ இன்று உறுதிப்படுத்தினார்.
அந்த கோரிக்கை தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், எந்த நிதியும் வழங்கப்படும் முன் IMF நிர்வாக சபையின் அங்கீகாரம் அவசியம் எனவும் அவர் கூறினார். திடீர் வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, வெளிப்புற அதிர்வுகள், இயற்கை பேரிடர்கள் அல்லது அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்காக RFI வசதி வழங்கப்படுகிறது.

இதேபோல், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இன்று நாடாளுமன்றத்தில், டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய முன்னெப்போதும் இல்லாத பொருளாதார அழுத்தம், பெரும் அளவிலான அடிப்படை வசதி சேதங்கள், மற்றும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஆகிய காரணங்களால், அரசு RFI உதவிக்கான கோரிக்கையை IMF-க்கு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.