Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் மகளான ஜான்வி கபூர்; திருப்பதி கோயிலுக்கு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

.

பிரபல நடிகை ஜான்வி கபூர் இன்று திருப்பதி கோயிலுக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகை ஜான்வி கபூர் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி கபூர், பின்னர் கோஸ்ட் ஸ்டோரிஸ் (Ghost stories), குஞ்சன் சக்சேனா (gunjan saxena), மில்லி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குஞ்சன் சக்சேனா திரைப்படத்தில் விமானப்படை வீரராக ஜான்வி கபூரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காகும். கடைசியாக ஜான்வி கபூர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ’தேவரா’ திரைப்படத்தில் நடித்தார். இது ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

தேவரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் இன்று (ஜன.04) காலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இன்று காலை மேல் திருப்பதி வரை நடந்தே சென்று விஐபி ஸ்ரீவாரி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.நடிகை ஜான்வி கபூரை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்று தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். நடிகை ஜான்வி கபூர் திருப்பதி கோயிலுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஜான்வி கபூர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.