Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. 

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது. 

ஆளுநர் தனது வரவேற்புரையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வந்துள்ள உலக வங்கிக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்தின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர். எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். உலக வங்கியின் செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழுவொன்றும் முன்மொழியப்பட்டது. அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பது என்று இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.