Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கம்!

மே18 ம் திகதியை நினைவுகூருவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயுர் கொடுப்பதாகும்.

போரின் இறுதி காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரங்கள் மற்றும் வன்முறையை நினைவு கூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதிகளில் இடம்பெற்றகொடுரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் அதற்காக தெரிவிக்கப்படும் காரணங்களும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன என இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் மற்றுமொரு நீதிமன்றமும் தடைவிதித்துள்ளது – கல்முனை நீதிமன்றம்அரசாங்கத்தை பொறுத்தவரை மே18 ம் திகதியை நினைவுகூருவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயுர் கொடுப்பதாகும்.

நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்வதற்கான காரணங்கள் நோய் பரவுவதை தடுப்பதிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் புத்துயுர் பெறுவதை தடுப்பதாக மாற்றமடைந்துள்ளன.

இதுபோரின் இறுதிகாலப்பகுதிகளில் இடம்பெற்றகொடுரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.இன்றுகாலை மட்டக்களப்பில் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுவதை பொலிஸார் தடுத்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அந்த பகுதிக்கான இணைப்பாளர் தலையிட்ட பின்னரே அவர்களிற்கு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.டிரான் அலஸ் அவர்களே இது உங்களின் உத்தரவின் கீழ் இடம்பெறுகின்றதா?