Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

’மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத்தான்’

.

சுமந்திரனைத் தோற்கடித்த சிறிதரன் வெளிநாட்டில் உள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று யாழ் நகரப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் சிலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கப் போகிறார்கள் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

தமிழரசு கட்சியின் முக்கிய நபர்கள் கலந்து கொள்ளாமல் சுமந்திரன் அணி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியான அறிவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ள நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு சுமந்திரன் அணி வாக்களிக்குமாறு கூறியதை தமிழரசு கட்சி கூறியதாக எடுத்துவிட முடியாது என்றார். (a)