தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால்; ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்திய சரவணபவன்
.
தமிழர்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் தமிழருக்கான உரிமைகள் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான் அனுபவம் உள்ள அரசியல்வாதி. ஆனால் இங்கு வரும் அரசியல்வாதிகள் அனைவரும் தமிழர்களுக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இருப்பினும் தமிழர்களுக்கு எந்த உரிமையை வழங்கப்போகிறார்கள் எனவும் எந்த அதிகாரங்களை வழங்க போகிறார்கள் எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தௌிவாக இருந்தால் மட்டுமே தமிழர்களின் வாக்குகளை வழங்க முடியும் என தௌிவாக தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.